காதல் தேசம் படத்தில் வரும் “என்னை காணவில்லையே நேற்றோடு” என்ற பாடலின் ராகத்தில் இந்த கவிதையை படியுங்கள், ரசிக்கலாம்.
பல்லவி
கண்ணில் காதல் கேட்கிறேன் இப்போது
முள்ளின் முனையில் நிற்க்கிறேன் நெஞ்சோடு
ஒரு வார்த்தை கேட்க்காமல் உயிர் வாடும் - கண்ணே ....
வலியோடு வாழ்கையை கொடுக்காதே
கண்ணனை இமைகள் என்றுமே வெறுக்காதே
உன்னை கண்டபோது நான் தொலைந்தேனே - கண்ணே ...
நெஞ்சுக்குள் பூகம்பம் .. உன்னாலே...
வா வா என் கண் முன்னே
பூவில் நீ தேன் தானே .. ( கண்ணில் காதல் )
சரணம் - 1
காற்றாக நான் வாழ்வேன் நீ வந்த்து நின்றால்
உன்னோடு பிரியா நிலையாவேன்
தீயாக நான் வாழ்வேன் நீ என்னில் என்றால்
சுடராக மாறி ஒளியாவேன்
என்னுள்ளில் உனைத்தானே எப்போதும் பார்த்தேன்
நான் மாறி வெகுனாளாய் நீயாக ஆனேன்
என்னோடு காதல் சொல்லிவிடு....... ( கண்ணில் காதல் )
சரணம் - 2
முத்தங்கள் எப்போதும் சத்தம் வராமல்
நெஞ்சோடு வைக்கும் ஒன்றாகும்
அலைவந்து தீண்டாமல் கரைகள் இராது
தீண்டல்கள் பாவம் ஆகாது
சாகாமல் எனைக்கொல்லும் வானத்துப் பூவே
நீயின்றி வாழ்வாகும் ஒரு காதல் தீவே
என்னோடு ஒன்றாய் கலந்துவிடு....... ( கண்ணில் காதல் )