ஆனாலும் இந்த சாப்ட்வேர் கம்பெனிகாரனுங்க தொல்ல தாங்க முடியல. அவனுங்க லீவ்ல போனா யாரும் தொல்ல பண்ணகூடாதாம். அப்படியே தப்பி தவறி ( அவனுங்க சொன்னத செய்யதான் ) கூப்பிட்டா ஒரு வாய்ஸ் மெயில் போட்டுட்டு நிம்மதியா இருப்பானுங்க. அதே கதை நம்ம கிட்ட பலிக்காது. நாம "எப்பவாவது" லீவு கீவுனு போய்ட்டா போதும், நம்ம மேனேஜர், வீட்டு போன்ல கூப்ட்டு (.. அவ்வ்வ்வ்வ்.. ), அவசரம்னு சொல்லி நம்மள தூக்கலேர்ந்து எழுப்பி வேலைசெய்ய சொல்றானுங்க.
என்னடா இவன் இப்படி பொலம்பரானேனு பாக்கறீங்களா.. இப்படிதான் ரெண்டு மாசமா ப்ராஜெக்ட் go-live னு( போகும் உயிர் .. என்னமா synch ஆவுது ) சொல்லி உயிரை வாங்கிட்டானுங்க. நானும் போனா போகுதுனு விட்டுட்டேன்..
ஏன்னா ப்ராஜெக்ட் முடியும்போது நீ ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்லிட்டனுங்க..
திரும்பி வந்து (படைப்பு) குதிரைய ஓட்டி பாத்ததுல வந்தது
வேலை
விளக்கின் விளிம்பில்
விட்டில் பூச்சியாய்
பறக்கவும் முடியாமல்
இறக்கவும் முடியாமல்
2 - கருத்துரை:
ரைட்டு.. ரொம்ப தூங்கிட்டீங்க போல..:)) ஃபாலோயர்ஸ், கவுண்டர் விட்ஜெட் எல்லாம் எங்கப்பா..??
///
ஷங்கர்.. said...
ரைட்டு.. ரொம்ப தூங்கிட்டீங்க போல..:)) ஃபாலோயர்ஸ், கவுண்டர் விட்ஜெட் எல்லாம் எங்கப்பா..?? ///
ஆர்வகோளாறுல ஏதோ செய்ய போய் அந்த விட்ஜெட் எல்லாம் காணாமல் போயிடிச்சி.. இப்போ இருக்கு தலைவா..
Post a Comment