"என்னடா சாமிநாதா.. நேத்து வனிதாவ பாக்கப்போனியே, என்ன சொன்னா ?"
"உனக்கு எப்படி தெரியும்?!!. நான் தான் யார்கிட்டயும் சொல்லலியே"..
"டேய் டேய்.. அதான் கருவாட்ட கவ்வுற மீனு மாதிரி போனியே.. விஷயத்த சொல்லுடானா"
"ஐயோ, வேணாம் விவேக்கு.. காலைலேர்ந்து அத மறந்துட்டு இருக்கேன்.. நீ மறுபடியும் மறுபடியும் வெறுப்பேத்தாத"
"உனக்கு ஐடியா கொடுக்க எனக்கு யோக்கியத இல்ல, இருந்தாலும் எதாவது ஹெல்ப் பண்ணலாம்னுதான்"
"சரிதான்டா.. நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்லற அளவுக்கு நான் ஆயிட்டேன் பாத்தியா"
"டேய்.. இந்தமாதிரி பேசிப்பேசிதான இப்படி வந்து நிக்கற.. இன்னும் உனக்கு அந்த தலைக்கனம் போகலயே"
"போதும் நிறுத்துடா. நீ உன் வேலைய போய்ப்பாரு. எனக்கு இதுல அதிஷ்டம் இல்ல. அவ்வளோதான்"
"வேணும்டா. எனக்கு நல்லா வேணும். உனக்கு போய் யோசனை சொல்ல வந்தேன் பாரு. என்னை செருப்பாலதான் அடிசிக்கணும். இது எப்படி தெரியுமா இருக்கு, நேத்து என் தோஸ்த் ஒருத்தன் கவிதை ஒன்னு சொன்னான். ஒரு நிமிஷம் அதை யோசிச்சி பாரு, அப்போ உரைக்கும் உனக்கு.
கேட்டுக்கோ."
எத்தனை முறை தலை குனிந்தாலும்
திருந்தாது இந்த மீசை முளைத்த - காதல்
நேற்று கூட குப்புறவிழுந்தது
எப்போதும் போல் மண் ஒட்டாமல்
3 - கருத்துரை:
எனக்கென்னவோ இதெல்லாம் சொந்த அனுபவம் போல தெரியுது.. உண்மைய சொல்லுங்க :)
அனுபவமோ
அந்த கவித உங்களோடதா ?
தொடர்ந்து எழுதுங்கள்
அடுத்த பதிவில் எனக்காக "தங்களுக்கு பிடித்த 10 படங்களை" வரிசைபடுத்துங்கள்
பன்னலாமா!!!!
// பிரசன்னா said...
எனக்கென்னவோ இதெல்லாம் சொந்த அனுபவம் போல தெரியுது.. உண்மைய சொல்லுங்க :)//
அனுபவம்தான், ஆனா சொந்த அனுபவம் இல்ல..
//அனுபவமோ
அந்த கவித உங்களோடதா ?
தொடர்ந்து எழுதுங்கள்
அடுத்த பதிவில் எனக்காக "தங்களுக்கு பிடித்த 10 படங்களை" வரிசைபடுத்துங்கள்
பன்னலாமா!!!//
ஓ.. பண்ணலாமே!!!!!
Post a Comment