தமிழ் படம் என்கிற ஒரு தரமான படம் (அப்படியா?) தந்த அதே டீம் இப்போ
“வ - குவாட்டர் கட்டிங் “ னு ஒரு படம் பண்ணிருக்காங்க. அந்த படத்தோட பாடல்கள் பற்றி கொஞ்சம் சொல்லலாம்னு - இந்த பதிவ போட்டேனுங்க.
மொத்தம் 5 பாடல்கள்.
1) ”உன்னை கண் தேடுதே” - னு ஆரம்பிக்ற முதல் பாடல், மொத்தமாய் தத்துவ பாடல். கிட்ட தட்ட பழைய பாடல் சாயலில் கிறங்கடிக்கும் வகையில் பாடல் பதிவு. அதிலிருந்து சம்பிள் ஒரு தத்துவம், “ கீழ தட்டி மேல திருகுனா அதுதான் சொர்கம் போகும் வழி”. (எப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க)
2) “தேடியே தேடியே” - னு தொடங்கும் பாடல், அயிரத்தில் ஒருவன் புகழ் ஆண்ட்ரியா பாடியிருக்கிரார். அருமையான குரல். பெண்ணின் ஏமாற்றம் குறித்த வரிகள். கேட்க இனிமை.
3) ”ஷேக் ஷேக்” - னு ஒரு பாட்டு. நீங்க நினைக்கிற ஷேக் இல்லீங்க ( நினைத்தவர்களுக்கு மட்டும்). சவுதி அரேபியா ஷேக். ஒரு ஜாலி பாட்டு. படம் பாத்தா தெரியும் இந்த பாட்ட எதுக்கு வெச்சானுங்கன்னு.
4) ”சார்ர்ப்பு சார்ர்ப்பு” - னு இன்னும் ஒரு தத்துவ பாட்டு. வாழ்வை மேம்படுதும் தத்துவங்கள். சாம்பிள் ஒன்னு - “ பேலன்ஸ் இல்லாம காலு பண்ணுவேன் , காலே இல்லாம பேலன்ஸ் பண்ணுவேன்”. தமிழ் வாழ்க.
5) “உன்னை கண் தேடுதே - ரீமிக்ஸ்” - இதுல பாட்டு (அது எங்க கேக்குது) அதேதான். ஆனா, டொம் டொம்ணு அடிச்சி காத கிழிக்கிறானுங்க. வேற ஒன்னும் பெருசா இல்ல.
நீங்க கேக்க விரும்பினால் - இங்கே சொடுக்கவும்
3 - கருத்துரை:
படம் அட்டு ஃப்லாப் ஆனாலும் பாட்டுக்கு பெரிய க்ளாப் தட்டிடுவோம் :) ரைட்டா :)
மத்ததோட கம்பேர் பண்ணும் போது ரெண்டாவது பாட்டு சும்மா சும்மா தான் :)
ரொம்ப சரி.. சூப்பர் பாட்டு உன்னை கண் தேடுதே .. என்ன் கரெக்டா?
Post a Comment