செவ்வனே கலைத்து வைக்கப்பட்டிருந்ததில்
எனக்கான காகிதத்தை எடுத்துக்கொண்டு
ஏற்கனவே பதிக்கபட்ட காலடிக்குள்
என்னிரு கால்களை பொருத்திகொண்டேன்
பதிக்கப்பட்ட காலடிக்கான அதிஷ்டம்
என் பாத சனியோடு சேர்ந்துகொண்டது
ஓயாமல் எனக்குள்ளே தன்நம்பிக்கை
தலைவிரிகோலமாய் தாண்டவம் ஆடியது
நீங்கி செல்ல பயம் என்றது - என்
ஆமை மனது
கடைசியில் நான் - வேறுவழியின்றி
நோட்டங்கள் நிறைந்த பார்வையினூடே
கையில் இருந்ததை நீட்டினேன்
தன்மானம் காக்கும் அறிவுகள்
தளர்ந்து விட்டது - ஆகையால்
நீட்டிய கையை மடக்காமல் நின்றுகொண்டிருந்தேன்
மிக நாட்களாக பொழுதுபோக்கு களமாகியிருந்த
எனக்கான போர்க்களத்தில் - இன்றையதினம்
ஆச்சரியமாக - அமைதியாக இருந்தது
வெகுவாக இந்நேரம் கணைகள் - என்
பின் மூளையில் மொய்த்திருக்கும் - என்று
யோசித்ததில் நான் அதிசயித்தேன் - அதற்க்குள்
ஒரு கணை முன்னே வந்து முட்டியது
தவறான வரிசையில் நின்றமைக்கு வருந்துகிறோம் - என்று
அசாராதனமாய் கூறியதில் நான் புரிந்துகொண்டது
சரியான வரிசையில் நிற்க
தவறான பாடத்தை படித்துவிட்டேன்..
3 - கருத்துரை:
வாங்க வாங்க.
வரும்போதே மிக அருமையான கவிதையோடு வந்திருக்கீங்க.
கலக்குங்க!
சரியான வரிசையில் நிற்க
தவறான பாடத்தை படித்துவிட்டேன்.. ம்ம்ம்ம்ம்
பா.ராஜாராம் said...
வாங்க வாங்க.
வரும்போதே மிக அருமையான கவிதையோடு வந்திருக்கீங்க.
கலக்குங்க!//
பா ரா வே சொல்லிட்டாரு... "வீணை" மீட்டிகிட்டே இருங்க.. .தேனமுதாய்... வருக வருக வளர்க.!!
Post a Comment