| |

தலைப்புச் செய்தி

“இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது” என்பது
செய்தித்தாளில் தலைப்புச்செய்தியானது
அதில் அடுத்த வரி
“ஏழைகளுக்கு இலவச கஞ்சி” என்பது
சாலையோர பெண்ணுக்கு தலைப்புச்செய்தியானது
அதற்க்கு அடுத்த வரி
“இன்று பள்ளிகளுக்கு விடுமுறை” என்பது
அவளின் குழந்தைக்கு தலைப்புச்செய்தியானது
”டாஸ்மாக்கில் தள்ளுபடி” என்பது
அவளின் அவனுக்கு  தலைப்புச்செய்தியானது
”தலைவர்கள் வாழ்த்து” எனும்
தலைப்புச்செய்தியே
இவர்களின் இன்றைய வாழ்க்கையானது !!

6 - கருத்துரை:

சுதர்ஷன் said...

நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் ..
நறுக்கென்று இருக்கிறது

ராஜவம்சம் said...

வந்தேனுங்க.

RVS said...

நீங்க நிச்சயம் தலைப்பு செய்தியா வரவதற்கு வாய்ப்புகள் பிரகாசமா இருக்கு. வெரி குட்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நன்றாக இருக்கிறது

அண்ணாமலை..!! said...

மெய்யாலுமே நல்லாயிருக்குங்க!
தொடர்ந்து எழுதுங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றாக இருக்கிறது.