| |

மனம் ஒரு குரங்கு

அமிலக் குடுவை மனம்
புகைக்க மறந்த வத்தி
திமிர் மறந்த நாட்களில்
தினமும் ஒரு பாடம்
சகதியில் நீராய்
கெட்டுவிட்ட புத்தி
சமத்துவம் பேசும் போது
விழித்துக்கொள்ளும் அறிவு
சந்தர்ப்பம் பார்த்து
இல்லை என்று போகிறது
முடங்கிப் போய்
மூலையில் பதுங்கும் பயம்
கண்டிப்பாய் காற்று
நம்மை நோக்கி வீசுவதில்லை
கண் பார்வையும்
பல சமயம் அப்படித்தான்
கடல் வாங்கும்
மேல் மூச்சும் கீழ் மூச்சும்
அலையாய் எனக்கு தெரியும்
பிம்பங்கள் பொய்
என்றது கண்ணாடி
மனசாட்சி உண்மையா
என்றது மனம்
மனம் ஒரு குரங்கு
என்றேன் நான் !!

3 - கருத்துரை:

அண்ணாமலை..!! said...

அட்வான்ஸ்டு திங்கிங்க்-ந்னு
இந்தக் கவிதையை சேர்த்துக்குங்க!
:)
யாராவது பிரபலமானவர்கள் எழுதியிருந்தா ஆகா..ஓகோ..என சொல்லப்பட்டிருக்கும்!
நீங்களும் பிரபலமானவர்தான்.
தொடர்ந்து எழுதுங்க!

Paleo God said...

மொத கமெண்ட்டே அண்ணாமலை கிருஷ்ணரா? :)

இத்தோட அடுத்த ஆடிமாசம்தான் எழ்துவீங்கன்னா நான் இந்த கடைக்கே வரமாட்டேன்!

--

கவித அருமை!

ருத்ர வீணை® said...

கஸ்டமர் இல்லனா எப்படிங்க கடை களை கட்டும்..

இனி நிறைய எழுதுவேன் !!!