| | 6 - கருத்துரை

தலைப்புச் செய்தி

“இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது” என்பது
செய்தித்தாளில் தலைப்புச்செய்தியானது
அதில் அடுத்த வரி
“ஏழைகளுக்கு இலவச கஞ்சி” என்பது
சாலையோர பெண்ணுக்கு தலைப்புச்செய்தியானது
அதற்க்கு அடுத்த வரி
“இன்று பள்ளிகளுக்கு விடுமுறை” என்பது
அவளின் குழந்தைக்கு தலைப்புச்செய்தியானது
”டாஸ்மாக்கில் தள்ளுபடி” என்பது
அவளின் அவனுக்கு  தலைப்புச்செய்தியானது
”தலைவர்கள் வாழ்த்து” எனும்
தலைப்புச்செய்தியே
இவர்களின் இன்றைய வாழ்க்கையானது !!

| | 1 - கருத்துரை

அதிஷ்டம்


சீட்டுக் கிளியின் சாமர்த்தியர்த்தில்
சில அதிஷ்டம் வரும்

நல்ல வேலை கிடைக்கவில்லை என்று
உட்கார்ந்து புலம்புவோர்க்கும்
காதலி ஓடிவிட்டாள் என்று
சோக கவிதை வாசிப்பவர்க்கும்
சாப்பிட வழியில்லை என்று
திருடி பிழைப்பவர்க்கும்
தன்னம்பிக்கையை மறந்துவிட்டு
தோற்றதும் சாக நினைப்பவர்க்கும்
நான் தலைவன் என்று
கட்டளைகள் விதிப்பவர்க்கும்

இவர்கள் நிமிர்ந்து பார்க்காமல்
இருக்கும் வரை நல்லது
இவர்களை பார்த்த கிளி
தனக்கு வந்த அதிஷ்டதில்
என்றோ பறந்திருக்கும்

| | 3 - கருத்துரை

மனம் ஒரு குரங்கு

அமிலக் குடுவை மனம்
புகைக்க மறந்த வத்தி
திமிர் மறந்த நாட்களில்
தினமும் ஒரு பாடம்
சகதியில் நீராய்
கெட்டுவிட்ட புத்தி
சமத்துவம் பேசும் போது
விழித்துக்கொள்ளும் அறிவு
சந்தர்ப்பம் பார்த்து
இல்லை என்று போகிறது
முடங்கிப் போய்
மூலையில் பதுங்கும் பயம்
கண்டிப்பாய் காற்று
நம்மை நோக்கி வீசுவதில்லை
கண் பார்வையும்
பல சமயம் அப்படித்தான்
கடல் வாங்கும்
மேல் மூச்சும் கீழ் மூச்சும்
அலையாய் எனக்கு தெரியும்
பிம்பங்கள் பொய்
என்றது கண்ணாடி
மனசாட்சி உண்மையா
என்றது மனம்
மனம் ஒரு குரங்கு
என்றேன் நான் !!