| | 4 - கருத்துரை

வாழ்கை ரீஸ்டார்ட்




"டேய் சங்கர். சூர்யாவ ஏண்டா சுட்ட?"

"இல்லடா. தெரியாம கை பட்டுடிச்சிடா. வேணும்னு பண்ணல"

"என்னடா சொல்ற. இப்போ என்ன பண்றது. எல்லாம் பிளான் பண்ணிட்டுதான இத ஆரம்பிச்சோம். இப்போ வந்து இப்படி பண்ணிட்டியே"

"ஐயோ. தப்பு பண்ணிட்டேன்டா. நானே கவலைல இருக்கேன். இப்போவந்து இப்படி பேசறியே."

"இல்லடா. அதுக்காக இல்ல. இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது."
"என்ன பண்ணலாம்னு சொல்லுடா. அம்மா கிட்ட வேணும்னா சொல்லிடலாமா?"

"ஆண்டிகிட்டயா????"
...........................

"ரெண்டு பேரும் சேந்து என்ன காரியம் பண்ணிருக்கீங்க. இப்படி பண்ணிட்டு என் முன்னாடி வந்து நிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்"

"ஆண்டி. நான் பண்ணல. சங்கர்தான். நான் வந்து வேணாம்னு சொல்றதுக்குள்ள அவன் சூர்யாவ சுட்டுட்டான்"

"அம்மா, நான் வேணும்னு பண்ணலாமா. தெரியாம கை பட்டுடிச்சி."

"இருங்க இருங்க ராத்திரி அப்பா வரட்டும் சொல்றேன். அந்த புள்ள சூர்யா இப்போ தான் காலேஜ் முடிச்சி பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருந்தான். அவன் ஒரு வேலைக்கு போய், வீடு வாங்கி, கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து வளத்து பேரன் பேத்தி பாத்துனு எவ்வளோ ஆசை வெச்சிருந்தான். இப்படி அநியாயமா கொண்ணுடீங்களே. உன் தங்கச்சிக்கு இந்த விஷயம் தெரியுமா?"

"என்னமா, அண்ணா என்ன பண்ணான்?"

"இல்லடி. சூர்யா அண்ணா செத்துப் போய்ட்டாரு. உங்க அண்ணன் சங்கர் அவன சுட்டுட்டான்"

"அண்ணா. ஏன்னா இப்படி பண்ண. அந்த அண்ணா எவ்வளோ நல்லவரு தெரியுமா. எனக்கு டிரஸ் சாக்லேட் எல்லாம் வங்கி தருவாரு. அப்பப்போ ஷாப்பிங் எல்லாம் கூட போயிருக்கேன். அந்த அண்ணா சூப்பரா ஜோக்கெல்லாம் சொல்லுவாரு. ஏன்னா இப்படி பண்ணிட்ட. அப்பா வந்தா திட்ட போறாரு."

"ஐயோ சும்மாரு. அப்பா வந்துட்டாரு."
..........................................

"என்னங்க, உங்க புள்ள சங்கர் செஞ்ச காரியத்த பாத்தீங்களா. அநியாயமா சூர்யாவ கொன்னுட்டான்"
"எந்த சூர்யா டி.. எழவ கொஞ்சம் புரியறாமதிரி சொல்லித்தொல"
"அதாங்க, நம்ம சூர்யாதாங்க"
"அதுக்கென்ன இப்போ.?"
"என்னங்க இப்படி கேக்கறீங்க. இனிமேல் ஒன்னும் பன்னமுடியாதா?"
"இரு நாளைக்கு ஒருத்தன கூட்டிட்டு வரேன். அவன் வந்து சரிபண்ணுவான்"
.........

"சார். கேம் ரீஸ்டார்ட் பண்ணனும் சார். வேற வழி இல்ல."
"அய்யயோ. அப்போ அந்த புள்ள சூர்யாவ பொழைக்கவெக்க முடியாதா?"
"மேடம். இது கம்ப்யூட்டர் கேம். ரீஸ்டார்ட் பண்ணினா, எல்லாம் மாறிடும். திரும்பவும் நீங்க முதல்லேர்ந்து ஸ்டார்ட் பண்ணனும்."
"வாட் ??????????.. அப்போ என்னோட சூர்யா?????????"
........

"அம்மா இப்பவும் சீரியஸ் கண்டிஷன்ல தான் இருக்காங்க. எதுவும் கொஞ்ச நேரம் கழிச்சிதான் சொல்லமுடியும்."
"டாக்டர் அம்மாவை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர். ப்ளீஸ்...."

......................................

| | 1 - கருத்துரை

அவனுக்கென்ன


"டேய் விச்சு, என்ன டல்லா இருக்க."

"இல்ல பாலாஜி, ஒரு விஷயம், ரொம்ப நேரமா யோசனை பண்றேன். ஒன்னும் புரிய மாட்டேங்குது."
"என்ன மச்சி, யோசனையெல்லாம் பலமா இருக்கு. என்ன லவ்வா ? "

"இல்ல...இல்ல.. ஆ....மாம் .. அதான்..".

"என்னடா, எந்த பொண்ணு."
"லாவண்யா மச்சி. ஒரு ரெண்டு வாட்டி திரும்பிப்பார்த்தா. அதான் அவ என்ன லவ் பண்றான்னு தோணுது, நீ என்ன மச்சி நினைக்கற?"

"டேய், பொண்ணுங்க திரும்பிப்பார்த்தா லவ் இல்ல மச்சி. அதெல்லாம் சும்மா உள்ளுலாயி"

"இல்ல மச்சி. அவ என்ன பார்த்து சிரிச்சிட்டு போனா. அதான் ட்ரை பண்ணலாம்னு.."

"அடப்போடா இவனே. பொம்பள சிரிச்சா போச்சுன்னு சொல்லி கேள்விப்பட்டதில்லையா ?"
"மச்சி. என்னடா இப்படி சொல்லிட்ட. அப்போ வேணாம்னு சொல்றியா"

"ஆமாம் மச்சி. நீ நல்லா படிக்கிற பையன். உனக்கு எதுக்கு மச்சி இதெல்லாம். வேணாம் மச்சி. விட்டுடு."

"அதுவும் சரிதான் மச்சி. அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வோதான்."

"கரெக்ட். சரி, இப்போ நீ போய் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்குல்ல, அதுக்கு ரெடி பண்ணு. நான் பின்னாடியே வந்துடறேன்."

"சரி பாலாஜி. ரூம்ல பாக்கலாம்"

*******************

"மச்சி ரஞ்சித், நான் பாலாஜி பேசறேன். அந்த லாவண்யா இன்னிக்கும் என்ன பாத்து சிரிச்சாடா . கண்டிப்பா லவ்வுனுதான் நினைக்கறேன். நீ என்ன சொல்ற?"

*******************

வனுக்கென்ன 
நான் இவளை காதலித்தால்
இவன் காதல் - என்றும்
இவன் மட்டும் அறிந்ததாயின்.


| | 2 - கருத்துரை

திருடிய காதல்



"வேணாம் முத்து. அப்பாகிட்ட மாட்டிகிட்டா அவ்வளோதான். என்ன பண்ணுவார்னு எனக்கே தெரியாது"

"அதான் தெரியாதுல்ல, அப்பறம் ஏன் அதப்பத்தி கவலைப்படற. நான் பாத்துக்கறேன். நீ வா."

"ஐயோ. கைய விடுடா. யாராவது பாக்க போறாங்க. எல்லாம் பஸ் ஏறிட்டு வெச்சுக்கலாம்."

"கையதானடி புடிச்சேன். அதுக்கேவா?. சரி, என் பின்னாடியே வா."

"இல்ல முத்து. எனக்கென்னவோ நாம தப்பு பண்றோம்னு தோணுது. இப்போ கூட ஒன்னும் கெட்டுப்போகல. நாம இப்படியே திரும்பி போய்டலாம். வீட்ல யாரவது கேட்டா எதாவது சொல்லி சமாளிச்சிடலாம்."


"சும்மா பயப்படாம வாடி. இதுதான் நம்ம தலையெழுத்துனு ஆயிடிச்சி. அப்புறம் கவலைப்பட்டா நடக்குமா. இதெல்லாம் ஒரு குழந்தை பொறந்தா சரியாயிடும்."

"டேய். இப்போவே என்ன குழந்தையை பத்தி பேசற. எனகென்னவோ பயமா இருக்குடா. என்னை ஏமாத்த மாட்டயில்ல."

"அடியேய். சும்மா ஒரு வார்த்தைக்கு சொன்னா, அத அப்படியே எடுத்துக்கிட்டா நான் என்னடி பண்றது. சும்மா புலம்பாம வா."

"பாத்தியா, இப்போவே புலம்பறேன் அது இதுனு சொல்ற. நீ கண்டிப்பா என்ன ஏமாத்தத்தான்போற"

"வேனாண்டி, நானே எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு பீதில வந்துகிட்டு இருக்கேன். சும்மா தொனதொனக்காத."

"இல்லடா. இப்போவே உனக்கு எம்மேல வெறுப்பு வந்துடிச்சி. இனிமே எப்படி நீ என்ன வெச்சி காப்பாத்த போற.எனக்கு நம்பிக்கையில்ல."

"சும்மா சும்மா இதையே சொல்லாத. நான் உனக்கு வேணும்னா என் பின்னாடி வா."

"என்னடா பயமுறுத்திரியா. நான் வரலனு சொன்னா என்னடா பண்ணுவ."

"நான் என்னடி பண்ணமுடியும். போலீஸ் ஸ்டேஷன்ல போய் காதல் திருடு போச்சுன்னு கம்ளைன்ட்டா பண்ண முடியும். போறதுனா போ."

"ரொம்ப பேசறடா நீ. உன் கூட என்னால வாழ முடியாது. நான் கிளம்பறேன். கூட்டிட்டு வந்த மாதிரி என்ன வீட்ல கொண்டு போய் விடு."

"எனக்கு திருட மட்டும்தாண்டி தெரியும். திருப்பி கொடுக்க தெரியாது. நான் உன்ன கொண்டுபோய் விட்டா இந்த திருட்டுக்கு மதிப்பில்லாம போய்டும். உன்ன பொறுத்த வரைக்கும் நான் உனக்கு லாயகில்லாதவன். ஆனா நீ எனக்கு எப்பவும் திருடிய காதலிதான்".


கேள்விகள் கேட்டதால்
காணாமல் போனது - என்றும்
கேட்காமல் நான்
திருடிய காதல்

| | 7 - கருத்துரை

எனக்கு பிடித்த பத்து படங்கள்



இந்த பதிவிற்க்கு காரணம் ஜில்தண்ணி என்ற பதிவு நண்பர். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் 

எனக்கு பிடித்த பத்து படங்கள்

1) 12 angry men - ஹாலிவுட் படம். ஒரே ஒரு அறையினுள் நடக்கும் கதை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவன். அவனது குற்றத்தை நிரூபிக்க ஜூரி எனப்படும் அதிகாரிகள் பன்னிரண்டு  பேர். அவர்களில் பதினோரு பேரும் குற்றவாளி என்று ஒத்துகொள்ள ,ஒருவன் மட்டும் அவன் குற்றம் செய்யாமல் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்று பேசத்தொடங்குகிறான். அங்கிருந்து, அவன் எப்படி மற்றவர்களையும் அவன் நிலைக்கு மாற்றுகிறான் என்பதுதான் கதை. இவ்வளவு நேர்த்தியான கதை சொல்லும் விதத்தை நான் இதுவரையில் கண்டது இல்லை.

2) the pursuit of Happyness  - ஹாலிவுட் படம். ஒரு வேலை இழந்த ஒருவன், தன் மனைவியும் விட்டுவிட்டு போய்விட, ஒரு குழந்தையுடன் எப்படி சாதிக்கிறான் என்பது தான் கதை. மனித வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகளும் ஒரு தனி மனிதனின் கோணத்தில் எப்படி தெரிகிறது என்பதை மிகவும் அழகாக சொல்லியிருப்பார்கள். ரசித்து பார்க்கக்கூடிய படம்.

3) நாயகன் - தமிழ் படம். இதை நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சாதாரண மனிதன், எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறான், மறுபடியும் அவன் சாதாரண மனிதனாய் தன் சொந்த வாழ்கையை பார்க்கும்போது அது எப்படி சிதைந்து இருக்கிறது, என்கிற விஷயத்தை இவ்வளவு அழகாக சொல்ல மணிரத்தினம் என்கிற ஒருவரால் மட்டும்தான் முடியும்.

4) மகாநதி - தமிழ் படம். இதுவும் நான் விளக்கி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய படம் இல்லை. ஒரு மனிதனை சமுதாயத்தால் எப்படியெல்லாம் ஏமாற்ற முடியும் என்பதை சொல்ல, இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. சில இடங்களில் கமலின் நடிப்பு கொஞ்சம் அதிகமாய் தெரிந்தாலும், அவரை விட்டால் இந்த படத்தை வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்பது என் கருத்து.

5) ஹேராம் - தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்த படம். கமல் நடிப்பில் நான் பார்த்து வியந்த படங்களில் இதுவும் ஒன்று. மிகவும் சிக்கலான ஒரு கதையை, அதைவிட சிக்கலான ஒரு திரைக்கதையில் சொன்ன படம். இளையராஜா இசையால் மயக்கிய விதம விவரிக்க இயலாதது.

6) Memento - ஹாலிவுட் படம். ஒரு படத்தின் திரைக்கதை இப்படியும் இருக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம். பின்னாலிருந்து தொடங்கும் கதையை முன்னும் பின்னுமாக கலந்து கடைசியில் தெளிவாக முடித்திருப்பார்கள். நான்காவது முறை பார்த்த பிறகு தான் எனக்கு ஓரளவுக்கு புரிந்தது.

7) cast away - ஹாலிவுட் படம். முதல் பாதி முழுவதும் வசனமே கிடையாது. இப்படியும் ஒரு படத்தை எடுத்து அதை வெற்றிப்படமாக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

8) வீரபாண்டிய கட்டபொம்மன் - தமிழ் படம்.ஒரு சுதந்திர போராட்ட தியாகி எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்பதும், அவனது வீரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கும், இந்த படம் ஒரு உதாரணம். வசனங்களில் மிகவும் பிரபலம் பெற்ற திரைப்படம். சிவாஜியின் நடிப்பில் ஒரு மைல்கல்.

9) காதல் - தமிழ் படம். காதல் கதைகளில் வெகுவாக பலரது மனதை கவர்ந்த படம். உண்மை கதை என்று எடுக்கப்பட்ட திரைப்படம். இயல்பான நடிப்பால் எல்லோரையும் கவரும்படி செய்திருப்பார்கள்.

10) AVATAR - ஹாலிவுட் படம். சமீபத்தில் வெளிவந்த திரைப்படம். மனிதனின் கற்பனை சக்தி எவ்வளவு பெரியது என்பதும், அதை திரையில் கொண்டுவருவது என்பது சாத்தியம் என்பதையும் நிருபித்த திரைப்படம். அதிகமாக ஆஸ்கார் வாங்கவில்லை என்றாலும், அநேகமாக மக்கள் பேராதரவு பெற்ற திரைப்படம்.

நீங்களும் தொடரலாமே !!!!!




| | 3 - கருத்துரை

குப்புறவிழுந்த காதல்




"என்னடா சாமிநாதா.. நேத்து வனிதாவ பாக்கப்போனியே, என்ன சொன்னா ?"

"உனக்கு எப்படி தெரியும்?!!. நான் தான் யார்கிட்டயும் சொல்லலியே"..

"டேய் டேய்.. அதான் கருவாட்ட கவ்வுற மீனு மாதிரி போனியே.. விஷயத்த சொல்லுடானா"

"ஐயோ, வேணாம் விவேக்கு.. காலைலேர்ந்து அத மறந்துட்டு இருக்கேன்.. நீ மறுபடியும் மறுபடியும் வெறுப்பேத்தாத"

"உனக்கு ஐடியா கொடுக்க எனக்கு யோக்கியத இல்ல, இருந்தாலும் எதாவது ஹெல்ப் பண்ணலாம்னுதான்"

"சரிதான்டா.. நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்லற அளவுக்கு நான் ஆயிட்டேன் பாத்தியா"

"டேய்.. இந்தமாதிரி பேசிப்பேசிதான இப்படி வந்து நிக்கற.. இன்னும் உனக்கு அந்த தலைக்கனம் போகலயே"

"போதும் நிறுத்துடா. நீ உன் வேலைய போய்ப்பாரு. எனக்கு இதுல அதிஷ்டம் இல்ல. அவ்வளோதான்"

"வேணும்டா. எனக்கு நல்லா வேணும். உனக்கு போய் யோசனை சொல்ல வந்தேன் பாரு. என்னை செருப்பாலதான் அடிசிக்கணும். இது எப்படி தெரியுமா இருக்கு, நேத்து என் தோஸ்த் ஒருத்தன் கவிதை ஒன்னு சொன்னான். ஒரு நிமிஷம் அதை யோசிச்சி பாரு, அப்போ உரைக்கும் உனக்கு.
கேட்டுக்கோ."

த்தனை முறை தலை குனிந்தாலும்
திருந்தாது இந்த மீசை முளைத்த - காதல்
நேற்று கூட குப்புறவிழுந்தது
எப்போதும் போல் மண் ஒட்டாமல்

| | 5 - கருத்துரை

காதல் கும்மாங்குத்து





"டேய் மாப்ள.. நான் இன்னிக்கு அனிதாகிட்ட லவ் சொல்லிட்டேன்டா"
"என்ன மச்சான் சொல்ற.. ஓகே ஆயிடிச்சா"
"இல்ல மாப்ள.. வழக்கம்போல ஊத்திகிச்சு.. இன்னிக்கு கொஞ்சம் ஓவரா போயிட்டா"
"என்ன மச்சி.. எதனா போலீஸு கீலீசுனு போயிட்டளா?"
"இல்ல மாப்ள.. இது வேற.. மனசுக்கு கஷ்டமா இருக்கு"
"இன்னான்னுதான் சொல்லேண்டா"
"வேணாம் மாப்ள.. பேஜாராய்டுவ.. விட்டுடு."
"சும்மா சீன் போடாத மச்சி.. என் கிட்ட சொல்றதுக்கு என்ன.. சொல்லு"
"இல்ல மச்சி.. லவ் சொன்னோன்ன அவ செருப்ப கழட்டி அடிச்சிட்டா டா."
"அடப்பாவி.. என்னடா சொல்ற"
"ஆமாம் மச்சி.. பேஜாராய்டிச்சி.. அதான் ஒரு கவிதை சொல்லிட்டு வந்துட்டேன்"
"கொய்யால.. அடிவாங்கியும் நீ திருந்தலியா?.. என்ன கவிதை அது சொல்லு.. நானும் கொஞ்சம் கேக்கறேன்"
"சொல்றேன் மச்சி.. சொல்றேன்.."

நீ என்னை
செருப்பால் அடித்ததுகூட வலிக்கவில்லை
ஆனால் - அப்போது அழுக்கான உனது
கால்களை துடைத்துவிட
என்னைப்போல் ஒருவன் வரமாட்டன் - என்று
நினைக்கும்போதுதான் வலிக்கிறது..

"வாழ்க உன் காதல் மச்சி.. இதுக்கு மேல என்னால தாங்க முடியாது.. நான் கிளம்பறேன்.."

| | 1 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 5



சொந்த வீடு - தொடர் பதிவு - 1
சொந்த வீடு - தொடர் பதிவு - 2
சொந்த வீடு - தொடர் பதிவு - 3

சொந்த வீடு - தொடர் பதிவு - 4

"நோ மிஸ்டர் ஆனந்த். வி வில் மேக் இட் போர் 30 லாக்ஸ்". இதையேதான் ஒரு பத்து முறையாவது சொல்லியிருப்பேன். ஆனந்திடம் பேசியதிலிருந்து அந்த வீடு நமக்குதான் என்று முடிவு செய்துகொண்டேன். மேலும் இரண்டு முறை அம்மாவயும், நான் கல்யாணம் செய்யப்போகும் பெண்ணையும் கூப்பிட்டு சம்மதம் வாங்கிவிட்டுதான் இந்த முடிவை எடுத்தேன். ஆமாம் இரண்டு
பேருடைய சம்மதம் எனக்கு ரொம்ப முக்கியம்.

"ஓகே. வென் டூ யு வான்ட் டு புட் தி சேல் அக்ரிமென்ட்" என்ற வார்த்தை நான் நினைத்து பார்த்திராத ஒன்று.

"டுமாரோ இஸ் தர்ஸ்டே, வி வில் டூ இட் ஆன் பிரைடே" என்று எழுந்து கை குலுக்கிவிட்டு நடந்து வந்தேன். ஏதோ பெரிய பிஸினெஸ் பேசிவிட்டு வருவது போல் ஒரு கெளரவம்.

அந்த காலத்தில் கையில் துண்டு போட்டு பேசிக்கொண்டதை, இன்று நாம் ஒரு பெஞ்ச் போட்டு உட்காந்து பேசிக்கொள்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது திடீரென்று வந்த ஒரு நினைவு  நெஞ்சத்தில் பாரமாய் இறங்கியது. அதை இறக்கி வைக்க சரியான ஆள் ஒருத்திதான். அவளிடம் இப்போது பேச முடியாது என்று நன்றாக தெரியும். இரவு வரை காத்திருக்க வேண்டும்.

"எல்லாம் கனவு மாதிரி இருக்குடா. எல்லாம் சரியா வருமில்ல" என்ற அம்மாவின் வார்த்தையில் அவ்வளவு உண்மை இருந்தது. பெங்களூரில் வீடு, அதுவும் நமக்கு மிகவும் பிடித்தமாதிரி இடத்தில அமைவது என்பது கிட்டத்தட்ட கனவுதான். நடந்துகொண்டிருப்பதால் இது நிஜம்தான் என்று உறுதிப்படுடத்திக்கொண்டேன்.

"எல்லாம் நல்ல நடக்கும்மா. நான் ராத்திரி அவகிட்ட பேசறேன். நீ ஒன்னும் கவலைப்படாத" என்று அவளை சமாதானப்படுத்தினேன்.

எனக்கும் அவளுக்கும் நிச்சயம் ஆகி இரண்டு மாதம்தான் ஆகியிருந்தது. இந்த இடைவெளியில் இவ்வளவு நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினம். அனால் நாங்கள் இருவரும் எங்கள் பெற்றவர்களின் கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவர்கள் என்பதால், தினமும் பேசிக்கொள்ளும்போதுகூட வாழ்கை எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் அதிக நேரம் செலவிடுவோம். காதல் மனதில் இருப்பதால் அதை வெளிப்படுத்தி நேரம் வீணடிப்பதில் எங்களுக்குள் உடன்பாடு இல்லை. இன்று இரவு பேசப்போகும் நேரம் மிகவும் முக்கியமானது என்பது இருவருக்கும் தெரியும்.

வழக்கமாய் நான்தான் அவளுக்கு போன் செய்வேன். இன்றைக்கும் அதுதான் வழக்கமானது.

"ஹலோ. ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?" என்ற கேள்வியில் நான் செய்த தவறை மெதுவாய் மறைக்க முயற்சித்தேன்.

"ஹ்ம்ம். இன்னிக்கு பேசனும்னு சொல்லிட்டு ஏன் இவ்வளோ லேட் பண்ணிட்டீங்க"

"இல்லமா. ஆபீஸ்லேந்து வர கொஞ்சம் லேட் ஆயிடிச்சி. வந்து சாப்டுட்டு உடனே உனக்கு போன் பண்றேன்."

"சரி சரி. இன்னுக்கு சாயங்காலம் அம்மா கிட்ட பேசும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தாளே. அம்மாவுக்கு வீடு ரொம்ப புடிச்சிடுத்தா?"

"ஆமாம். இனி நீதான் வந்து பாத்துட்டு முடிவு பண்ணனும். உனக்கு புடிச்சிருந்தாதான் முடிகப்போறேன்"

"ஐயோ. நான்தான் அன்னிக்கே சொன்னேனே. உங்களுக்கு புடிச்சிருந்தா எனக்கு புடிச்சாமாதிரின்னு"

"அப்படி இல்லமா. நீ வந்து ஒருவாட்டியாவது பாக்கவேனாமா"

"அதெல்லாம் அப்பறம் வந்து பாத்துக்கலாம். என்ன சொல்லிட்டு வந்தீங்க ஆனந்த்கிட்ட"

"போய் பேசி ஒருவழியா 30க்கு முடிவுபண்ணிட்டேன். ஆனா எப்படி சமாளிக்கப்போறோம்னு நினைச்சாத்தான் பயமா இருக்கு."

"எதுக்குங்க இவ்வளோ டென்ஷன். நான் சப்போர்ட்டுக்கு இருக்குறவரைக்கும் நீங்க இப்படி டென்ஷன் ஆகக்கூடாது" என்ற அவளின் வார்த்தை, என் மனதில் இருந்த பாரத்தை முழுவதுமாய் இறக்கியது.

"இல்லமா. வரும்போதே உனக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கறேனோனு ஒரு தயக்கம். அதான்" என்றவுடன் அவளிடம் ஒரு அமைதி.

"இருக்கியா. ஏன் பேசவே மாட்டேங்கற"

"நீங்க அப்படி பேசினது எனக்கு கஷ்டமா இருக்கு. இவ்வளோ நாளா நாம இதப்பத்திதானே பேசியிருக்கோம். இப்போ வந்து இந்தமாதிரி கேட்டா எப்படி" என்ற அவளது உரிமை என்னை திணறடித்தது.

" சரி சரி . சாரி . இனிமே அப்படி பேசமாட்டேன். போதுமா"

"ஹ்ம்ம். நீங்க போய் மொதல்ல அக்ரிமென்ட் போட்டுட்டுவாங்க. நான் இந்த சாட்டர்டே வந்து பாக்கறேன்"

"அப்போ முடிச்சிடலாம்னு சொல்றியா?"

"இன்னும் என்ன யோசனை. அம்மா அப்பாவுக்கு புடிச்சிருக்கு. உங்களுக்கு புடிச்சிருக்கு. இதுக்குமேல என்ன வேணும்?"

"இல்லாமா. நீயும் ஒருதடவ வந்து பாத்துட்டா..."

"மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. நமக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும். எனக்கு தூக்கம் வருது. குட் நைட்" என்று வைத்துவிட்டாள்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், என்பது என் வகையில் சரியாயிருந்தது. பாரம் இல்லாத மனதுடன் நிம்மதியாய் படுத்து உறங்கினேன்.

அந்த வெள்ளிகிழமை சேல் அக்ரிமென்ட் போட்டதிலிருந்து தொடங்கிய குழப்பம். எந்த பாங்கில் லோன் வாங்குவது? லோன் வாங்குவதில் என்னென்ன செய்யவேண்டும்? என்பது போன்ற நியாமமான குழப்பங்கள்தான். இருந்தாலும் இவைகளை ததீர்த்தாக வேண்டும்.
எப்படி தீர்கப்போகிறோம் என்பதில் தொடங்கியது அடுத்த கவலை.

தொடரும்...

| | 0 - கருத்துரை

சொந்த வீடு - தொடர் பதிவு - 4



சொந்த வீடு - தொடர் பதிவு - 1
சொந்த வீடு - தொடர் பதிவு - 2
சொந்த வீடு - தொடர் பதிவு - 3

"மாமி. இந்த பிளாட் கட்டி எத்தன வருஷம் ஆறது"
"ஒரு வருஷம் மேலே ஆயிடுத்து. இந்த பிளாட்டுக்கு நிறையபேர் வந்து பாத்துட்டு போன. யாருக்கு அதிஷ்டம் இருக்கோ அவாளுக்கு தானே கிடைக்கும்", என்ற மாமியின் வார்த்தையில் உண்மை இருக்குமோ என்று தோன்றியது.
"பாக்கலாம் மாமி. எப்படியும் 35 லக்ஷம் சொல்லுவான். அதுக்குமேல இந்த ரெஜிஸ்ட்ரேசன் வேற. அவ்வளோ எல்லாம் என்னால இபோதைக்கு முடியாது".
"ஐயோ. இல்ல இல்ல. இது 32 தான் சொல்றன். கொஞ்சம் பேசினா முப்பதுக்கு முடிக்கலாம்", என்றதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவ்வளவு நல்ல பிளாட், ஓரளவுக்கு இல்லை, நாங்கள் நினைத்ததை விடவும் மிகவும் அருமையான இடம். சமாளிக்க முடியும் என்ற விலை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இதை எப்படியும் முடிக்க வேண்டும் என்று தோன்றியது.
"மாமி, இந்த பர்னிச்சர் எல்லாம் அவன் எடுத்துண்டு போகலியா"
"இல்ல இல்ல. இதெல்லாம் சேத்துதான் பிளாட்".
என்னது, கரும்பும் தின்ன கொடுத்து, அதுக்கு கூலியும் கொடுக்கறான்களா, என்ற எண்ணம்தான் என் மனதில் ஓடியது.
"ஓ. அப்படியா. நல்லா இருக்கு மாமி. கிடைச்சா உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்" என்று மாமியிடம் பேசிக்கொண்டே, அம்மாவின் முகத்தை பார்த்தேன். இதுவரையில் நான் பார்த்திராத அப்படி ஒரு தெளிவு.
"கிடைக்கும். நீ பொய் மொதல்ல அவனுக்கு போன் பண்ணு. கீழ வா. நம்பர் தரேன்" என்று எங்களை கூட்டிகொண்டு கீழே இறங்கினாள் மாமி. ஒருவித பயம் கலந்த பதற்றத்துடனே நாங்கள் பின் தொடர்ந்தோம்.

அவர்களிடம் நம்பர் வாங்கி போன் செய்யலாம் என்று முயன்ற போது, அம்மா பின்னாலிருந்து,
"டேய், யாருக்கு போன் பண்ற. நாகேஷுக்கா இல்ல ஆனந்துக்கா", என்று விசாரித்தாள்.
"மொதல்ல ஆனந்துக்குதாம்மா போன் பண்றேன். மாமி அவர்கிட்டதான் மொதல்ல பேச சொன்னா", என்று சொல்லிவிட்டு அந்த சீட்டில் இருந்த நம்பரை டயல் செய்தேன்.

"ஹலோ. ஆம் ஐ ஸ்பீக்கிங் டு மிஸ்டர் ஆனந்த்"
"எஸ் ஸ்பீக்கிங்", என்றதும் என் படபடப்பு கூடியது.
"சார். ஐ யம் காலிங் ப்ரம் அரிக்கேரி. ஐ ஹாவ் ஜஸ்ட் சீன் யுவர் பிளாட் இன் தேர்", என்றதும் அவருக்கு புரிந்து விட்டது.
"கேன் யு கம் ஓவர் டு மை ஆபீஸ் டுமாரோ", என்றவரிடம்
"சார், டுமாரோ இஸ் டியூஸ்டே, ஐ வில் கம் ஆன் வெட்னெஸ்டே" என்று கூற,
"ஓகே. ஆஸ் யு விஷ். டேக் டௌன் மை அட்ரஸ்" என்று அட்ரசை சொல்லிவிட்டு வைத்து விட்டார்.
அவசர அவசரமாய் வெளியில் ஓடி வந்த அம்மா
"என்னடா ஆச்சு" என்று ஆர்வமாய் கேட்டாள்.
"நேரா வந்து பேச சொன்னாரும்மா"
"எப்போ போகப்போற"
"வெட்னெஸ்டே வரேன்னு சொல்லிருக்கேன்", என்று சொல்லிவிட்டு, என் ரூமை நோக்கி சென்றேன்.
"சரி. இன்னைக்கு சும்மா பேங்க்ல போய் கேட்டுண்டு வாடா."
"சரிம்மா. எனக்கு டைம் கிடைச்சா போறேன்" என்று சொல்லிவிட்டு, கிளம்ப தயாரானேன். என் மனதில் முழுவதும் அந்த வீட்டின் ஞாபகம்தான்.

ஆர்வம் அதிகமானதால், அன்றே ஒரு பாங்கில் போய் தேவையானவற்றை தெரிந்துகொண்டேன். நான் எப்பவும் இவ்வளவு சீக்கிரத்தில் எந்தவிஷயதையும் போய் விசாரித்ததில்லை. இது நடக்கிறது என்றால் உள்ளுக்குள் ஏதோ ஒரு உந்துதல் தள்ளிகொண்டிருகிறது என்றுதான் அர்த்தம். அது நிச்சயம் அந்த வீடு தான் என்று எனக்கு தெரியும். நாளை காலை எழுந்து சீக்கிரம் தயாராகி அந்த ஆனந்தை போய் பார்க்கவேண்டும் என்பதால், சீக்கிரமே உறங்கிவிட்டேன்.

"டேய், சீக்கிரம் ரெடியாகு. கிளம்பறதுக்கு முன்னாடி அவனுக்கு போன் பண்ணிட்டு கிளம்பு" என்று அம்மா அவள் பங்குக்கு கொஞ்சம் கூற, ஏற்கனவே என் மனதில் என்னென்ன கேட்க வேண்டும் என்று பட்டியல் போட்டுகொண்டதை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டேன்.

"சார். ஐ யம் காலிங் ப்ரம் அரிக்கேரி" என்று ஆரம்பித்தவுடன் அவருக்கு புரிந்துவிட்டது," எஸ், ஐ அம் வைடிங்  பார் யு" என்று பதில் வந்தது.


"சரிம்மா. அவருக்கு போன் பண்ணிட்டேன்.ரெடி யா இருக்காராம். நாங்க கிளம்பறோம்." என்று அவள் கையில் வைத்திருந்த தோசையை பிய்த்து இரண்டு வாய் போட்டுகொண்டு,"வாப்பா" என்று அப்பாவை அழைத்தேன். அப்பா வழக்கம் போல் பின்னாடி வேட்டியை மடித்துக்கொண்டு உட்கார,வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இன்னும் உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத படபடப்பு. அகலக்கால் வைக்கிறோமோ , சமாளிக்க முடியுமா, இடம் நல்ல இருந்தாலும் வில்லங்கம் ஏதும் இருக்ககூடாதே, எல்லாம் சரியாகி வந்தால் பாங்கில் லோன் சீக்கிரம் கிடைக்கணுமே.. இவ்வளவு கேள்விகளுடன் வண்டி ஓட்டுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இத்தனையையும் தாண்டி ஒரு வேகம். இவன் எப்போதும் இப்படியே தான் இருப்பான் என்று நினைத்தவர்களிடம், இப்படி இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று ஒரு வைராக்கியம். விதி சிலநேரத்தில் இப்படியும் நமக்கு நல்லது செய்கிறது. மதில் சுவர் இல்லாத கோட்டையை கட்டத் தொடங்கிவிட்டேன். முடித்துவைக்க இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில்.

தொடரும்..