| | 3 - கருத்துரை

வ - குவாட்டர் கட்டிங் !!



தமிழ் படம் என்கிற ஒரு தரமான படம் (அப்படியா?) தந்த அதே டீம் இப்போ
“வ - குவாட்டர் கட்டிங் “ னு ஒரு படம் பண்ணிருக்காங்க. அந்த படத்தோட பாடல்கள் பற்றி  கொஞ்சம் சொல்லலாம்னு - இந்த பதிவ போட்டேனுங்க.
மொத்தம் 5 பாடல்கள்.

1) ”உன்னை கண் தேடுதே” - னு ஆரம்பிக்ற முதல் பாடல், மொத்தமாய் தத்துவ பாடல்.  கிட்ட தட்ட பழைய பாடல் சாயலில் கிறங்கடிக்கும் வகையில் பாடல் பதிவு. அதிலிருந்து சம்பிள் ஒரு தத்துவம், “ கீழ தட்டி மேல திருகுனா அதுதான் சொர்கம் போகும் வழி”. (எப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க)

2) “தேடியே தேடியே” - னு தொடங்கும் பாடல், அயிரத்தில் ஒருவன் புகழ் ஆண்ட்ரியா பாடியிருக்கிரார். அருமையான குரல். பெண்ணின் ஏமாற்றம் குறித்த வரிகள். கேட்க இனிமை.

3) ”ஷேக் ஷேக்” - னு ஒரு பாட்டு. நீங்க நினைக்கிற ஷேக் இல்லீங்க ( நினைத்தவர்களுக்கு மட்டும்). சவுதி அரேபியா ஷேக். ஒரு ஜாலி பாட்டு. படம் பாத்தா தெரியும் இந்த பாட்ட எதுக்கு வெச்சானுங்கன்னு.

4) ”சார்ர்ப்பு சார்ர்ப்பு” - னு இன்னும் ஒரு தத்துவ பாட்டு. வாழ்வை மேம்படுதும் தத்துவங்கள். சாம்பிள் ஒன்னு - “ பேலன்ஸ் இல்லாம காலு பண்ணுவேன் , காலே இல்லாம பேலன்ஸ் பண்ணுவேன்”. தமிழ் வாழ்க.

5) “உன்னை கண் தேடுதே - ரீமிக்ஸ்” - இதுல பாட்டு (அது எங்க கேக்குது) அதேதான். ஆனா, டொம் டொம்ணு அடிச்சி காத கிழிக்கிறானுங்க. வேற ஒன்னும் பெருசா இல்ல.

நீங்க கேக்க விரும்பினால் - இங்கே சொடுக்கவும்

| | 4 - கருத்துரை

கிருஷ்ண ஜெயந்தி - மொக்க கவிதை

கிருஷ்ணன் பொறந்தது
கிருஷ்ண ஜெயந்தி
காந்தி பொறந்தா
காந்தி ஜெயந்தி
அப்போ
ஜெயந்தி பொறந்தா ? !!!

சீடை முறுக்கு
அவில் வெண்ணை
இதெல்லாம்
பொறந்த குழந்தை (கிருஷ்ணன்)
எப்படிபா தின்னும் ?!!

(சாமி கண்ண குத்தாம இருந்தா சரி :-)

| | 6 - கருத்துரை

தலைப்புச் செய்தி

“இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது” என்பது
செய்தித்தாளில் தலைப்புச்செய்தியானது
அதில் அடுத்த வரி
“ஏழைகளுக்கு இலவச கஞ்சி” என்பது
சாலையோர பெண்ணுக்கு தலைப்புச்செய்தியானது
அதற்க்கு அடுத்த வரி
“இன்று பள்ளிகளுக்கு விடுமுறை” என்பது
அவளின் குழந்தைக்கு தலைப்புச்செய்தியானது
”டாஸ்மாக்கில் தள்ளுபடி” என்பது
அவளின் அவனுக்கு  தலைப்புச்செய்தியானது
”தலைவர்கள் வாழ்த்து” எனும்
தலைப்புச்செய்தியே
இவர்களின் இன்றைய வாழ்க்கையானது !!

| | 1 - கருத்துரை

அதிஷ்டம்


சீட்டுக் கிளியின் சாமர்த்தியர்த்தில்
சில அதிஷ்டம் வரும்

நல்ல வேலை கிடைக்கவில்லை என்று
உட்கார்ந்து புலம்புவோர்க்கும்
காதலி ஓடிவிட்டாள் என்று
சோக கவிதை வாசிப்பவர்க்கும்
சாப்பிட வழியில்லை என்று
திருடி பிழைப்பவர்க்கும்
தன்னம்பிக்கையை மறந்துவிட்டு
தோற்றதும் சாக நினைப்பவர்க்கும்
நான் தலைவன் என்று
கட்டளைகள் விதிப்பவர்க்கும்

இவர்கள் நிமிர்ந்து பார்க்காமல்
இருக்கும் வரை நல்லது
இவர்களை பார்த்த கிளி
தனக்கு வந்த அதிஷ்டதில்
என்றோ பறந்திருக்கும்

| | 3 - கருத்துரை

மனம் ஒரு குரங்கு

அமிலக் குடுவை மனம்
புகைக்க மறந்த வத்தி
திமிர் மறந்த நாட்களில்
தினமும் ஒரு பாடம்
சகதியில் நீராய்
கெட்டுவிட்ட புத்தி
சமத்துவம் பேசும் போது
விழித்துக்கொள்ளும் அறிவு
சந்தர்ப்பம் பார்த்து
இல்லை என்று போகிறது
முடங்கிப் போய்
மூலையில் பதுங்கும் பயம்
கண்டிப்பாய் காற்று
நம்மை நோக்கி வீசுவதில்லை
கண் பார்வையும்
பல சமயம் அப்படித்தான்
கடல் வாங்கும்
மேல் மூச்சும் கீழ் மூச்சும்
அலையாய் எனக்கு தெரியும்
பிம்பங்கள் பொய்
என்றது கண்ணாடி
மனசாட்சி உண்மையா
என்றது மனம்
மனம் ஒரு குரங்கு
என்றேன் நான் !!