செய்தித்தாளில் தலைப்புச்செய்தியானது
அதில் அடுத்த வரி
“ஏழைகளுக்கு இலவச கஞ்சி” என்பது
சாலையோர பெண்ணுக்கு தலைப்புச்செய்தியானது
அதற்க்கு அடுத்த வரி
“இன்று பள்ளிகளுக்கு விடுமுறை” என்பது
அவளின் குழந்தைக்கு தலைப்புச்செய்தியானது
”டாஸ்மாக்கில் தள்ளுபடி” என்பது
அவளின் அவனுக்கு தலைப்புச்செய்தியானது
”தலைவர்கள் வாழ்த்து” எனும்
தலைப்புச்செய்தியே
இவர்களின் இன்றைய வாழ்க்கையானது !!