| | 1 - கருத்துரை

அதாம் கவிதைகள் - 2





இரவின் மௌன இரைச்சல்
மெதுவாய் தூக்கம் கலைக்கும்
விழியின் வழி வெப்பம்
புவியின் நிலை மாற்றம்
விளைவில் ஒரு நிகழ்வு
முதலில் வரும் உணர்வு
தினமும் இது தொடர்ந்தால்
புல்வெளியில் பனி படர்ந்தால்
வினவும் மறுகணமே
சரியென்றது மனமே
தொடரும் முடிவுரைக்கும்
சில மயக்கங்களின் விருப்பம்

| | 3 - கருத்துரை

ஆதாம் கவிதைகள் - 1



கண்கள் தொலைந்து போக
மை திருடிய இரவு
நாய்களின் நகர்வலத்தை
நிசப்தம் தேடும் நேரம்
கூடுகள் தாவித்தாவி
ஓய்ந்து போன பேய்கள்
எதிர் நோக்கா
திமிர் எண்ணம்
அதிர்வலையின் புதிர்
புணர்வது என் புத்தி
முதல் மயக்கம் முடிந்ததுவே
பலமயக்கம் தொடங்கிடவே !!

| | 4 - கருத்துரை

வாழ்கை ரீஸ்டார்ட்




"டேய் சங்கர். சூர்யாவ ஏண்டா சுட்ட?"

"இல்லடா. தெரியாம கை பட்டுடிச்சிடா. வேணும்னு பண்ணல"

"என்னடா சொல்ற. இப்போ என்ன பண்றது. எல்லாம் பிளான் பண்ணிட்டுதான இத ஆரம்பிச்சோம். இப்போ வந்து இப்படி பண்ணிட்டியே"

"ஐயோ. தப்பு பண்ணிட்டேன்டா. நானே கவலைல இருக்கேன். இப்போவந்து இப்படி பேசறியே."

"இல்லடா. அதுக்காக இல்ல. இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது."
"என்ன பண்ணலாம்னு சொல்லுடா. அம்மா கிட்ட வேணும்னா சொல்லிடலாமா?"

"ஆண்டிகிட்டயா????"
...........................

"ரெண்டு பேரும் சேந்து என்ன காரியம் பண்ணிருக்கீங்க. இப்படி பண்ணிட்டு என் முன்னாடி வந்து நிக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்"

"ஆண்டி. நான் பண்ணல. சங்கர்தான். நான் வந்து வேணாம்னு சொல்றதுக்குள்ள அவன் சூர்யாவ சுட்டுட்டான்"

"அம்மா, நான் வேணும்னு பண்ணலாமா. தெரியாம கை பட்டுடிச்சி."

"இருங்க இருங்க ராத்திரி அப்பா வரட்டும் சொல்றேன். அந்த புள்ள சூர்யா இப்போ தான் காலேஜ் முடிச்சி பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருந்தான். அவன் ஒரு வேலைக்கு போய், வீடு வாங்கி, கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து வளத்து பேரன் பேத்தி பாத்துனு எவ்வளோ ஆசை வெச்சிருந்தான். இப்படி அநியாயமா கொண்ணுடீங்களே. உன் தங்கச்சிக்கு இந்த விஷயம் தெரியுமா?"

"என்னமா, அண்ணா என்ன பண்ணான்?"

"இல்லடி. சூர்யா அண்ணா செத்துப் போய்ட்டாரு. உங்க அண்ணன் சங்கர் அவன சுட்டுட்டான்"

"அண்ணா. ஏன்னா இப்படி பண்ண. அந்த அண்ணா எவ்வளோ நல்லவரு தெரியுமா. எனக்கு டிரஸ் சாக்லேட் எல்லாம் வங்கி தருவாரு. அப்பப்போ ஷாப்பிங் எல்லாம் கூட போயிருக்கேன். அந்த அண்ணா சூப்பரா ஜோக்கெல்லாம் சொல்லுவாரு. ஏன்னா இப்படி பண்ணிட்ட. அப்பா வந்தா திட்ட போறாரு."

"ஐயோ சும்மாரு. அப்பா வந்துட்டாரு."
..........................................

"என்னங்க, உங்க புள்ள சங்கர் செஞ்ச காரியத்த பாத்தீங்களா. அநியாயமா சூர்யாவ கொன்னுட்டான்"
"எந்த சூர்யா டி.. எழவ கொஞ்சம் புரியறாமதிரி சொல்லித்தொல"
"அதாங்க, நம்ம சூர்யாதாங்க"
"அதுக்கென்ன இப்போ.?"
"என்னங்க இப்படி கேக்கறீங்க. இனிமேல் ஒன்னும் பன்னமுடியாதா?"
"இரு நாளைக்கு ஒருத்தன கூட்டிட்டு வரேன். அவன் வந்து சரிபண்ணுவான்"
.........

"சார். கேம் ரீஸ்டார்ட் பண்ணனும் சார். வேற வழி இல்ல."
"அய்யயோ. அப்போ அந்த புள்ள சூர்யாவ பொழைக்கவெக்க முடியாதா?"
"மேடம். இது கம்ப்யூட்டர் கேம். ரீஸ்டார்ட் பண்ணினா, எல்லாம் மாறிடும். திரும்பவும் நீங்க முதல்லேர்ந்து ஸ்டார்ட் பண்ணனும்."
"வாட் ??????????.. அப்போ என்னோட சூர்யா?????????"
........

"அம்மா இப்பவும் சீரியஸ் கண்டிஷன்ல தான் இருக்காங்க. எதுவும் கொஞ்ச நேரம் கழிச்சிதான் சொல்லமுடியும்."
"டாக்டர் அம்மாவை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர். ப்ளீஸ்...."

......................................

| | 1 - கருத்துரை

அவனுக்கென்ன


"டேய் விச்சு, என்ன டல்லா இருக்க."

"இல்ல பாலாஜி, ஒரு விஷயம், ரொம்ப நேரமா யோசனை பண்றேன். ஒன்னும் புரிய மாட்டேங்குது."
"என்ன மச்சி, யோசனையெல்லாம் பலமா இருக்கு. என்ன லவ்வா ? "

"இல்ல...இல்ல.. ஆ....மாம் .. அதான்..".

"என்னடா, எந்த பொண்ணு."
"லாவண்யா மச்சி. ஒரு ரெண்டு வாட்டி திரும்பிப்பார்த்தா. அதான் அவ என்ன லவ் பண்றான்னு தோணுது, நீ என்ன மச்சி நினைக்கற?"

"டேய், பொண்ணுங்க திரும்பிப்பார்த்தா லவ் இல்ல மச்சி. அதெல்லாம் சும்மா உள்ளுலாயி"

"இல்ல மச்சி. அவ என்ன பார்த்து சிரிச்சிட்டு போனா. அதான் ட்ரை பண்ணலாம்னு.."

"அடப்போடா இவனே. பொம்பள சிரிச்சா போச்சுன்னு சொல்லி கேள்விப்பட்டதில்லையா ?"
"மச்சி. என்னடா இப்படி சொல்லிட்ட. அப்போ வேணாம்னு சொல்றியா"

"ஆமாம் மச்சி. நீ நல்லா படிக்கிற பையன். உனக்கு எதுக்கு மச்சி இதெல்லாம். வேணாம் மச்சி. விட்டுடு."

"அதுவும் சரிதான் மச்சி. அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வோதான்."

"கரெக்ட். சரி, இப்போ நீ போய் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்குல்ல, அதுக்கு ரெடி பண்ணு. நான் பின்னாடியே வந்துடறேன்."

"சரி பாலாஜி. ரூம்ல பாக்கலாம்"

*******************

"மச்சி ரஞ்சித், நான் பாலாஜி பேசறேன். அந்த லாவண்யா இன்னிக்கும் என்ன பாத்து சிரிச்சாடா . கண்டிப்பா லவ்வுனுதான் நினைக்கறேன். நீ என்ன சொல்ற?"

*******************

வனுக்கென்ன 
நான் இவளை காதலித்தால்
இவன் காதல் - என்றும்
இவன் மட்டும் அறிந்ததாயின்.


| | 2 - கருத்துரை

திருடிய காதல்



"வேணாம் முத்து. அப்பாகிட்ட மாட்டிகிட்டா அவ்வளோதான். என்ன பண்ணுவார்னு எனக்கே தெரியாது"

"அதான் தெரியாதுல்ல, அப்பறம் ஏன் அதப்பத்தி கவலைப்படற. நான் பாத்துக்கறேன். நீ வா."

"ஐயோ. கைய விடுடா. யாராவது பாக்க போறாங்க. எல்லாம் பஸ் ஏறிட்டு வெச்சுக்கலாம்."

"கையதானடி புடிச்சேன். அதுக்கேவா?. சரி, என் பின்னாடியே வா."

"இல்ல முத்து. எனக்கென்னவோ நாம தப்பு பண்றோம்னு தோணுது. இப்போ கூட ஒன்னும் கெட்டுப்போகல. நாம இப்படியே திரும்பி போய்டலாம். வீட்ல யாரவது கேட்டா எதாவது சொல்லி சமாளிச்சிடலாம்."


"சும்மா பயப்படாம வாடி. இதுதான் நம்ம தலையெழுத்துனு ஆயிடிச்சி. அப்புறம் கவலைப்பட்டா நடக்குமா. இதெல்லாம் ஒரு குழந்தை பொறந்தா சரியாயிடும்."

"டேய். இப்போவே என்ன குழந்தையை பத்தி பேசற. எனகென்னவோ பயமா இருக்குடா. என்னை ஏமாத்த மாட்டயில்ல."

"அடியேய். சும்மா ஒரு வார்த்தைக்கு சொன்னா, அத அப்படியே எடுத்துக்கிட்டா நான் என்னடி பண்றது. சும்மா புலம்பாம வா."

"பாத்தியா, இப்போவே புலம்பறேன் அது இதுனு சொல்ற. நீ கண்டிப்பா என்ன ஏமாத்தத்தான்போற"

"வேனாண்டி, நானே எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு பீதில வந்துகிட்டு இருக்கேன். சும்மா தொனதொனக்காத."

"இல்லடா. இப்போவே உனக்கு எம்மேல வெறுப்பு வந்துடிச்சி. இனிமே எப்படி நீ என்ன வெச்சி காப்பாத்த போற.எனக்கு நம்பிக்கையில்ல."

"சும்மா சும்மா இதையே சொல்லாத. நான் உனக்கு வேணும்னா என் பின்னாடி வா."

"என்னடா பயமுறுத்திரியா. நான் வரலனு சொன்னா என்னடா பண்ணுவ."

"நான் என்னடி பண்ணமுடியும். போலீஸ் ஸ்டேஷன்ல போய் காதல் திருடு போச்சுன்னு கம்ளைன்ட்டா பண்ண முடியும். போறதுனா போ."

"ரொம்ப பேசறடா நீ. உன் கூட என்னால வாழ முடியாது. நான் கிளம்பறேன். கூட்டிட்டு வந்த மாதிரி என்ன வீட்ல கொண்டு போய் விடு."

"எனக்கு திருட மட்டும்தாண்டி தெரியும். திருப்பி கொடுக்க தெரியாது. நான் உன்ன கொண்டுபோய் விட்டா இந்த திருட்டுக்கு மதிப்பில்லாம போய்டும். உன்ன பொறுத்த வரைக்கும் நான் உனக்கு லாயகில்லாதவன். ஆனா நீ எனக்கு எப்பவும் திருடிய காதலிதான்".


கேள்விகள் கேட்டதால்
காணாமல் போனது - என்றும்
கேட்காமல் நான்
திருடிய காதல்