| |

பாட்டு இங்கே - மெட்டு எங்கே (1)

இது உங்களை இசையமைப்பாளராக்கும் ஒரு சிறு முயர்சிதான். பாட்டுக்கு மெட்டு போடுவது கொஞ்சம் கடினமான காரியம்.  இதோ பாட்டு, எங்கே உங்கள் மெட்டு ???!!!!

பல்லவி 


ஊத்திக்கொடு மச்சான்
ஊத்திக்கொடு மச்சான்
ஊருகாய கொஞ்சம் சேத்துக்கடிடா


சேத்து வெச்சேன் கவலை
தீத்துப்புட்டான் சகலை - இவன்
குவாட்டருக்கு பொறந்த தெய்வமகன்டா


சேர்ந்து குடிச்சி போவோமே நாங்க
ஊருக்குள்ள தேரு போலத்தான்
மயங்கி விழுந்து மல்லாக்க படுப்போம்
சூரியன் விழிப்பான் எங்க மூஞ்சிலத்தான்


சரணம் - 1


காலையில் தினமும் கால் பாட்டில் அடிச்சா
நாளெள்லாம் இருக்கும் ரொம்ப லைட்டா
மாலை மயங்கும் மப்பு ஏற குடிச்சா
ராவெல்லாம் இருக்கும் செம்ம டைட்டா


கை நெறையா காசு இருந்தா
கவர்ச்சி பாரு இருக்குது
கொஞ்சம் கஷ்டமாயி போச்சுதுன்னா
கவர்மெண்ட் கடை இருக்குது


கட்டிங் அடிச்சி கொத்து உட்டா
வருது பாரு வாந்தி
பிட்டிங் இல்லா வாழ்கை மாறும்
கரைய சேரு நீந்தி
(ஊத்திக்கொடு மச்சான்)


சரணம் - 2


ஓசியில ஊத்திகிட்டா ஒன்னாம் பெக்குல ஜோரு
கடைசியில பில்லு வந்தா பிச்சிகிட்டு ஓடு
ராசியில்லா குடிமகனாய் நீ இருந்த பாரு
எம்சி தந்த வாழ்கையில அதயே தினம் நாடு


ஃபுல்லு கூட பீரு சேர்ந்தா 
அப்போதைக்கு அப்பீட்டு
கள்ளு குடிச்சி போதை வந்தா 
எப்பவுமே ரிப்பீட்டு


முழு பாட்டில் வாங்கி வெச்சு
மூடி சிக்குனா போச்சு
வாழ்கைய நீ வாழ்ந்து காட்டு
சும்மா என்ன பேச்சு
(ஊத்திக்கொடு மச்சான்)

4 - கருத்துரை:

ரமேஷ் வைத்யா said...

மெட்டு போட்டு உங்களுக்கு எப்பிடிய்யா அனுப்புறது?

ருத்ர வீணை® said...

ஹலோ, ஆன்லைன்ல நிறைய ஃப்ரீ சைட் இருக்குபா, அதுல அப்லோட் பண்னுங்க..

Moha said...

சாஹித்ய அகாடெமி ல இந்த வருஷம் உங்க கவிதை தான் அரங்கேற போகுது. முடிஞ்சா ருத்ர வீணை ல இசை அமைக்க முடியுதான்னு பாப்போம்....

Moha said...

நல்ல முயற்சி....