| |

உதவி

”நேத்து எப்போடா வீட்டுக்கு வந்த ?” - அம்மாவின் கேள்வி சந்தேக தொணியில் இருந்தது.
“அது வந்து அம்மா”  என்பதர்க்குள்ளாக அவளின் இரண்டாவது கேள்வி என்னை புரட்டிப்போட்டது.
“குடிச்சிட்டு வந்தியா?”
“அம்மா. என்ன அம்மா இப்படி கேக்கற. நான் ஏம்மா குடிக்கப்போறன்”
“அப்போ அந்த பாட்டில் எப்படி உன்னோட கார் டிக்கில வந்துச்சு?” என்று அவள் கேட்ட போதுதான் எனக்கு எல்லாமே புரிந்தது.
“அம்மா. அந்த விஷயம் பத்தி பேசலாம்னு தான் காலைல வந்ததும் உன் ரூமுக்கு வந்தேன். நீ நல்லா தூங்கிட்டு இருந்த. அதான் அப்பறம் சொல்லலாம்னு இருந்தேன்.”
“என்னடா விஷயம்.  எதாவது பிரச்சனையா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லமா. நேத்து ராத்திரி நான் லாஸ்ட் கஸ்டமர வீட்ல விட்டுட்டு வரும் போது ஒரு சின்ன ஆக்ஸிடண்ட். ஒரு பையன் கார் முன்னாடி வந்து விழுந்துட்டான். அவன கொண்டுபோய் ஆஸ்பதிரில சேத்துட்டு கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு வந்தேன். அதான் லேட் ஆயிடிச்சி.”
“அப்போ அந்த பையனுக்கு என்ன ஆச்சி?”
“ஒன்னும் இல்லமா, சின்ன காயம்தான். ஆனா ஆஸ்பத்திரில சொன்ன விஷயத்த கேட்டுட்டுத்தான் ரொம்ப சங்கடமா போச்சு.”
“என்னடா சொன்னாங்க? அந்த பையனுக்கு என்னவாம் ?”
“அதுவந்தும்மா, அந்த பையனுக்கு லிவர் கெட்டுப்போச்சாம்”
“என்னாடா சொல்ற, எப்படி?”
“அம்மா, அந்த பையன் ரொம்ப குடிப்பான் போலருக்கு, அதான் இப்படினு டாக்டர் சொன்னாரு. யாருகிட்டயும் சொல்லாம இருந்திருக்கான் போலருக்கு.”
“அய்யோ பாவம். அவங்க வீட்டுக்கு போன் பண்ணினியா? இப்போ அவன் கூட யாரு இருக்கா?”
“அவங்க அப்பாவுக்கு போன் பண்ணினேன், அவரு அங்க வந்த்ததும் தான் நான் கிளம்பி வந்த்தேன்”
“சரி. யாரு பெத்த புள்ளயோ, நால்லா இருக்கட்டும். நீ இன்னைக்கு எப்பொவாவது அந்த பக்கம் போனைனா அவன ஒரு வாட்டி போய் பாரு.”
“சரிம்மா. நான் கொஞ்ச நேரம் போய் தூங்கரேன்.” என்று சொல்வதர்க்குள்ளாக யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
“இரும்மா, நான் பாக்கறேன்” என்று கதவை திறந்த போது அங்கு நின்றுகொண்டிருந்தது அந்த பையனின் அப்பா.
“என்ன சார். ஏதாவது பிரச்சனையா?”
“இல்ல தம்பி. அவன் இப்போ கண்ணு முழிசிட்டான். நீங்க மட்டும் இல்லனா அவன நான் உயிரோடவே பாத்திருக்க முடியாது. தம்பி நீங்க என்ன வேலை செய்யறீங்க”
“நான் கால் டாக்ஸி டிரைவர் சார். நேத்து ராத்திரி நான் லாஸ்ட் கஸ்டமர டிராப் பண்ணிட்டு வரும் போது தான் உங்க பையனை இடிச்சிட்டேன். நான் இடிச்சதுல காயம் பட்டுதான் ரத்தம் வருதுனு ரொம்ப பயந்த்துட்டேன் சார். ஆனா, டாக்டர் கிட்ட விசாரிச்சப்பரம்தான் தெரிஞ்சது உங்க பையனுக்கு இப்படி ஒரு வியாதினு. டாக்டர் என்ன சார் சொன்னாரு”
“இப்போவே கண்டுபிடிச்சது ரொம்ப நல்லாதாபோச்சுனு சொன்னாரு தம்பி. மறுபடியும் சொல்றேன், நீங்க மட்டும் இல்லனா அவன நான் உயிரோடவே பாத்திருக்க முடியாது. இதுக்கு நான் ஏதாவது கைமாறு செய்யனும் தம்பி.”
“அதெல்லாம் வேணாம் சார். உங்க பையனை நல்லபடியா கவனிச்சிக்குங்க”
“இல்ல தம்பி. நீங்க ஓட்டுறது உங்க சொந்த வண்டியா?”
“இல்ல சார். பேங்க் லோன்ல தான் வாங்கிருக்கேன்.”
“தம்பி. இனிமேல் இது உங்க சொந்த வண்டி. அந்த பேங்க் டாக்குமெண்ட்ஸ் மட்டும் குடுங்க, மத்தத நான் பாத்துக்குறேன்.”
“அய்யாயோ. நான் இதெல்லாம் எதிர்ப்பார்த்து செய்யால சார்.”
“அது தான் தம்பி இந்தக்காலத்துல இல்ல. நான் இந்த உதவிய உங்களுக்கு செய்தே ஆகனும். அதுதான் நீங்க செஞ்ச உதவிக்கு நான் செய்யற நன்றிக்கடன்.” என்ற சொல்லைக்கேட்டு நான் செய்வதறியாது நின்றேன்.

5 - கருத்துரை:

ஜெயந்த் கிருஷ்ணா said...

Nalla kathai... intru ippadi nalla kunam padaiththavarkalai paarppathe kadinamaaka ullathu..

அண்ணாமலை..!! said...

கதை நல்ல விவரிப்புங்க!
உண்மைக்கதை-ந்னா ஓ.கே!
கதைதான்னா இன்னும் கொஞ்சம் முடிவு களைகட்டியிருக்கலாம்!
:)

எஸ்.கே said...

நல்லாயிருந்துச்சு சார்!

மந்திரன் said...

feel good cinema மாதிரி feel good கதை

Unknown said...

கதை அருமை !!
(http://last3rooms.blogspot.com/)