| |

இங்கதான இருந்துச்சு

வருசம் பூரா வாசம் வீசும்
பூந்தோட்டம் இருந்துச்சு
வந்த சனம் குந்தி பேச
வரப்பு மேடும் இருந்துச்சு
வயிரார எடுத்து குடிக்க
வாய்க்கால் கூட இருந்துச்சு
நிம்மதியா படுத்து தூங்க
கட்டாந்தர இருந்துச்சு
கால் நீட்டி களைப்பார
கயத்து கட்டில் இருந்துச்சு
நாலு வார்த்த நல்லா பேச
நட்புகூட்டம் இருந்துச்சு
ஒரமோரு கடன் கேக்க
ஒட்டு வீடு இருந்துச்சு
புள்ளகுட்டி விளையாட
பஸ் ரோடு இருந்துச்சு
பால் குடிச்ச பிள்ளயாரு
கோவில் கூட இருந்துச்சு
நாளெல்லாம் நீச்சலடிக்க
கேணி ஒன்னு இருந்துச்சு
அதிரசம் முறுக்கு விக்கும்
அண்ணாச்சி கடை இருந்துச்சு
பொழுதுசாய போயிட்டு வர
கட வீதி இருந்துச்சு
முக்கால்வாசி முழுசா ஒழுகும்
ஓட்டு வீடு இருந்துச்சு
எட்டுப்பட்டில் எங்க கிராமம்
உச்சமாத்தான் இருந்துச்சு
மூனு நாலு மாசம் முந்தி
சேதி ஒன்னு வந்துச்சு
கம்ப்யுட்டர் கம்பேணி காரு
வரிசை காட்டி நின்னுச்சு
கண்ண மூடி திறக்கயில
கட்டிடமா மாறிச்சு
யாரும் கேட்டா நாங்க சொல்ல
ஒரு வார்த்த மீந்துச்சு
“ரொம்ப நாளா எங்க கிராமம்
இங்கதான இருந்துச்சு"

2 - கருத்துரை:

cheena (சீனா) said...

அன்பின் ருத்ர வீணை

அருமையான் சிந்தனை - என்ன செய்வது - கிராமங்கள் மாறுகின்றன - இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன - அறிவியல் முன்னேற்றம் எங்கோ கொண்டு சொல்கிறது.

அருமையாக கிராமத்து இயல்பான மொழியில் கவிதை வடித்தமை நன்று

நல்வாழ்த்துகள் ருத்ர வீனை

அண்ணாமலை..!! said...

ஏனுங்க! சூப்பர்.சூப்பர்..சூப்பருங்க!!!!!!!