| |

எனக்கு பிடித்த பத்து படங்கள்



இந்த பதிவிற்க்கு காரணம் ஜில்தண்ணி என்ற பதிவு நண்பர். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் 

எனக்கு பிடித்த பத்து படங்கள்

1) 12 angry men - ஹாலிவுட் படம். ஒரே ஒரு அறையினுள் நடக்கும் கதை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவன். அவனது குற்றத்தை நிரூபிக்க ஜூரி எனப்படும் அதிகாரிகள் பன்னிரண்டு  பேர். அவர்களில் பதினோரு பேரும் குற்றவாளி என்று ஒத்துகொள்ள ,ஒருவன் மட்டும் அவன் குற்றம் செய்யாமல் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்று பேசத்தொடங்குகிறான். அங்கிருந்து, அவன் எப்படி மற்றவர்களையும் அவன் நிலைக்கு மாற்றுகிறான் என்பதுதான் கதை. இவ்வளவு நேர்த்தியான கதை சொல்லும் விதத்தை நான் இதுவரையில் கண்டது இல்லை.

2) the pursuit of Happyness  - ஹாலிவுட் படம். ஒரு வேலை இழந்த ஒருவன், தன் மனைவியும் விட்டுவிட்டு போய்விட, ஒரு குழந்தையுடன் எப்படி சாதிக்கிறான் என்பது தான் கதை. மனித வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகளும் ஒரு தனி மனிதனின் கோணத்தில் எப்படி தெரிகிறது என்பதை மிகவும் அழகாக சொல்லியிருப்பார்கள். ரசித்து பார்க்கக்கூடிய படம்.

3) நாயகன் - தமிழ் படம். இதை நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சாதாரண மனிதன், எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறான், மறுபடியும் அவன் சாதாரண மனிதனாய் தன் சொந்த வாழ்கையை பார்க்கும்போது அது எப்படி சிதைந்து இருக்கிறது, என்கிற விஷயத்தை இவ்வளவு அழகாக சொல்ல மணிரத்தினம் என்கிற ஒருவரால் மட்டும்தான் முடியும்.

4) மகாநதி - தமிழ் படம். இதுவும் நான் விளக்கி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய படம் இல்லை. ஒரு மனிதனை சமுதாயத்தால் எப்படியெல்லாம் ஏமாற்ற முடியும் என்பதை சொல்ல, இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. சில இடங்களில் கமலின் நடிப்பு கொஞ்சம் அதிகமாய் தெரிந்தாலும், அவரை விட்டால் இந்த படத்தை வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்பது என் கருத்து.

5) ஹேராம் - தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்த படம். கமல் நடிப்பில் நான் பார்த்து வியந்த படங்களில் இதுவும் ஒன்று. மிகவும் சிக்கலான ஒரு கதையை, அதைவிட சிக்கலான ஒரு திரைக்கதையில் சொன்ன படம். இளையராஜா இசையால் மயக்கிய விதம விவரிக்க இயலாதது.

6) Memento - ஹாலிவுட் படம். ஒரு படத்தின் திரைக்கதை இப்படியும் இருக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம். பின்னாலிருந்து தொடங்கும் கதையை முன்னும் பின்னுமாக கலந்து கடைசியில் தெளிவாக முடித்திருப்பார்கள். நான்காவது முறை பார்த்த பிறகு தான் எனக்கு ஓரளவுக்கு புரிந்தது.

7) cast away - ஹாலிவுட் படம். முதல் பாதி முழுவதும் வசனமே கிடையாது. இப்படியும் ஒரு படத்தை எடுத்து அதை வெற்றிப்படமாக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

8) வீரபாண்டிய கட்டபொம்மன் - தமிழ் படம்.ஒரு சுதந்திர போராட்ட தியாகி எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்பதும், அவனது வீரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கும், இந்த படம் ஒரு உதாரணம். வசனங்களில் மிகவும் பிரபலம் பெற்ற திரைப்படம். சிவாஜியின் நடிப்பில் ஒரு மைல்கல்.

9) காதல் - தமிழ் படம். காதல் கதைகளில் வெகுவாக பலரது மனதை கவர்ந்த படம். உண்மை கதை என்று எடுக்கப்பட்ட திரைப்படம். இயல்பான நடிப்பால் எல்லோரையும் கவரும்படி செய்திருப்பார்கள்.

10) AVATAR - ஹாலிவுட் படம். சமீபத்தில் வெளிவந்த திரைப்படம். மனிதனின் கற்பனை சக்தி எவ்வளவு பெரியது என்பதும், அதை திரையில் கொண்டுவருவது என்பது சாத்தியம் என்பதையும் நிருபித்த திரைப்படம். அதிகமாக ஆஸ்கார் வாங்கவில்லை என்றாலும், அநேகமாக மக்கள் பேராதரவு பெற்ற திரைப்படம்.

நீங்களும் தொடரலாமே !!!!!




7 - கருத்துரை:

Paleo God said...

சுறா பத்தி ஒன்னுமே எழுதலையே?

:)

DREAMER said...

நல்ல தேர்வுகள்... உங்களது இந்த இடுகையினால் '12 Angry Men' என்கிற படத்தைப் பற்றி தெரிந்துக் கொண்டேன்.

-
DREAMER

ருத்ர வீணை® said...

சுறா .. வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்..

12 angry men... ரொம்ப நல்ல படம்.. ஆனா கொஞ்சம் பொறுமை வேணும், இந்த படம் பாக்க..

Prasanna said...

Good Selection :)

ஜில்தண்ணி said...

நல்லது நல்லது
ஹாலிவுட் பிரியரே

12 angry men படம் பார்த்தே தீர வேண்டும் :)))

சாமக்கோடங்கி said...

நானும் டௌன்லோட் செய்யத் துடங்கி விட்டேன்.. 12 angrymen படத்தை...


அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள்...

ILLUMINATI said...

உங்கள் ரசனை கிட்டத் தட்ட என்னுடயதோடு ஒத்து போகிறது.12 angry men,pursuit of happiness பார்க்க வேண்டிய படங்கள்...என்றாவது விமர்சனம் எழுத வேண்டும் என்று இருக்கிறேன்.எப்போதோ,தெரியாது....
keep up the good work... :)