| |

சொந்த வீடு - தொடர் பதிவு - 5



சொந்த வீடு - தொடர் பதிவு - 1
சொந்த வீடு - தொடர் பதிவு - 2
சொந்த வீடு - தொடர் பதிவு - 3

சொந்த வீடு - தொடர் பதிவு - 4

"நோ மிஸ்டர் ஆனந்த். வி வில் மேக் இட் போர் 30 லாக்ஸ்". இதையேதான் ஒரு பத்து முறையாவது சொல்லியிருப்பேன். ஆனந்திடம் பேசியதிலிருந்து அந்த வீடு நமக்குதான் என்று முடிவு செய்துகொண்டேன். மேலும் இரண்டு முறை அம்மாவயும், நான் கல்யாணம் செய்யப்போகும் பெண்ணையும் கூப்பிட்டு சம்மதம் வாங்கிவிட்டுதான் இந்த முடிவை எடுத்தேன். ஆமாம் இரண்டு
பேருடைய சம்மதம் எனக்கு ரொம்ப முக்கியம்.

"ஓகே. வென் டூ யு வான்ட் டு புட் தி சேல் அக்ரிமென்ட்" என்ற வார்த்தை நான் நினைத்து பார்த்திராத ஒன்று.

"டுமாரோ இஸ் தர்ஸ்டே, வி வில் டூ இட் ஆன் பிரைடே" என்று எழுந்து கை குலுக்கிவிட்டு நடந்து வந்தேன். ஏதோ பெரிய பிஸினெஸ் பேசிவிட்டு வருவது போல் ஒரு கெளரவம்.

அந்த காலத்தில் கையில் துண்டு போட்டு பேசிக்கொண்டதை, இன்று நாம் ஒரு பெஞ்ச் போட்டு உட்காந்து பேசிக்கொள்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது திடீரென்று வந்த ஒரு நினைவு  நெஞ்சத்தில் பாரமாய் இறங்கியது. அதை இறக்கி வைக்க சரியான ஆள் ஒருத்திதான். அவளிடம் இப்போது பேச முடியாது என்று நன்றாக தெரியும். இரவு வரை காத்திருக்க வேண்டும்.

"எல்லாம் கனவு மாதிரி இருக்குடா. எல்லாம் சரியா வருமில்ல" என்ற அம்மாவின் வார்த்தையில் அவ்வளவு உண்மை இருந்தது. பெங்களூரில் வீடு, அதுவும் நமக்கு மிகவும் பிடித்தமாதிரி இடத்தில அமைவது என்பது கிட்டத்தட்ட கனவுதான். நடந்துகொண்டிருப்பதால் இது நிஜம்தான் என்று உறுதிப்படுடத்திக்கொண்டேன்.

"எல்லாம் நல்ல நடக்கும்மா. நான் ராத்திரி அவகிட்ட பேசறேன். நீ ஒன்னும் கவலைப்படாத" என்று அவளை சமாதானப்படுத்தினேன்.

எனக்கும் அவளுக்கும் நிச்சயம் ஆகி இரண்டு மாதம்தான் ஆகியிருந்தது. இந்த இடைவெளியில் இவ்வளவு நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினம். அனால் நாங்கள் இருவரும் எங்கள் பெற்றவர்களின் கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவர்கள் என்பதால், தினமும் பேசிக்கொள்ளும்போதுகூட வாழ்கை எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் அதிக நேரம் செலவிடுவோம். காதல் மனதில் இருப்பதால் அதை வெளிப்படுத்தி நேரம் வீணடிப்பதில் எங்களுக்குள் உடன்பாடு இல்லை. இன்று இரவு பேசப்போகும் நேரம் மிகவும் முக்கியமானது என்பது இருவருக்கும் தெரியும்.

வழக்கமாய் நான்தான் அவளுக்கு போன் செய்வேன். இன்றைக்கும் அதுதான் வழக்கமானது.

"ஹலோ. ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?" என்ற கேள்வியில் நான் செய்த தவறை மெதுவாய் மறைக்க முயற்சித்தேன்.

"ஹ்ம்ம். இன்னிக்கு பேசனும்னு சொல்லிட்டு ஏன் இவ்வளோ லேட் பண்ணிட்டீங்க"

"இல்லமா. ஆபீஸ்லேந்து வர கொஞ்சம் லேட் ஆயிடிச்சி. வந்து சாப்டுட்டு உடனே உனக்கு போன் பண்றேன்."

"சரி சரி. இன்னுக்கு சாயங்காலம் அம்மா கிட்ட பேசும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தாளே. அம்மாவுக்கு வீடு ரொம்ப புடிச்சிடுத்தா?"

"ஆமாம். இனி நீதான் வந்து பாத்துட்டு முடிவு பண்ணனும். உனக்கு புடிச்சிருந்தாதான் முடிகப்போறேன்"

"ஐயோ. நான்தான் அன்னிக்கே சொன்னேனே. உங்களுக்கு புடிச்சிருந்தா எனக்கு புடிச்சாமாதிரின்னு"

"அப்படி இல்லமா. நீ வந்து ஒருவாட்டியாவது பாக்கவேனாமா"

"அதெல்லாம் அப்பறம் வந்து பாத்துக்கலாம். என்ன சொல்லிட்டு வந்தீங்க ஆனந்த்கிட்ட"

"போய் பேசி ஒருவழியா 30க்கு முடிவுபண்ணிட்டேன். ஆனா எப்படி சமாளிக்கப்போறோம்னு நினைச்சாத்தான் பயமா இருக்கு."

"எதுக்குங்க இவ்வளோ டென்ஷன். நான் சப்போர்ட்டுக்கு இருக்குறவரைக்கும் நீங்க இப்படி டென்ஷன் ஆகக்கூடாது" என்ற அவளின் வார்த்தை, என் மனதில் இருந்த பாரத்தை முழுவதுமாய் இறக்கியது.

"இல்லமா. வரும்போதே உனக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கறேனோனு ஒரு தயக்கம். அதான்" என்றவுடன் அவளிடம் ஒரு அமைதி.

"இருக்கியா. ஏன் பேசவே மாட்டேங்கற"

"நீங்க அப்படி பேசினது எனக்கு கஷ்டமா இருக்கு. இவ்வளோ நாளா நாம இதப்பத்திதானே பேசியிருக்கோம். இப்போ வந்து இந்தமாதிரி கேட்டா எப்படி" என்ற அவளது உரிமை என்னை திணறடித்தது.

" சரி சரி . சாரி . இனிமே அப்படி பேசமாட்டேன். போதுமா"

"ஹ்ம்ம். நீங்க போய் மொதல்ல அக்ரிமென்ட் போட்டுட்டுவாங்க. நான் இந்த சாட்டர்டே வந்து பாக்கறேன்"

"அப்போ முடிச்சிடலாம்னு சொல்றியா?"

"இன்னும் என்ன யோசனை. அம்மா அப்பாவுக்கு புடிச்சிருக்கு. உங்களுக்கு புடிச்சிருக்கு. இதுக்குமேல என்ன வேணும்?"

"இல்லாமா. நீயும் ஒருதடவ வந்து பாத்துட்டா..."

"மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. நமக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும். எனக்கு தூக்கம் வருது. குட் நைட்" என்று வைத்துவிட்டாள்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், என்பது என் வகையில் சரியாயிருந்தது. பாரம் இல்லாத மனதுடன் நிம்மதியாய் படுத்து உறங்கினேன்.

அந்த வெள்ளிகிழமை சேல் அக்ரிமென்ட் போட்டதிலிருந்து தொடங்கிய குழப்பம். எந்த பாங்கில் லோன் வாங்குவது? லோன் வாங்குவதில் என்னென்ன செய்யவேண்டும்? என்பது போன்ற நியாமமான குழப்பங்கள்தான். இருந்தாலும் இவைகளை ததீர்த்தாக வேண்டும்.
எப்படி தீர்கப்போகிறோம் என்பதில் தொடங்கியது அடுத்த கவலை.

தொடரும்...

1 - கருத்துரை:

Prasanna said...

Useful articles.. Continue the good work :)